(UTV | கொழும்பு) – மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், வார இறுதியில் அல்லது அடுத்தவார முதற்பகுதியில், பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.