(UTV | கொழும்பு) – வௌிவிவகார அமைச்சின் கன்சியூலர் அலுவலக சேவைகளை இன்று(11) முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கன்சியூலர் பிரிவின் ஆவணங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பொதுமக்கள் 0112 338 812 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது consular.mfa.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முற்கூட்டியே தமக்கான தினங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்சியூலர் பிரிவு நாளாந்தம் காலை 10 மணி தொடக்கம் மாலை 02 மணி வரை வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையுடன் திறக்கப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் கன்சியூலர் பிரிவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.