விளையாட்டு

ஐந்தாவது முறையாகவும் மும்பை கிண்ணத்தை சுவீகரித்தது

(UTV |  துபாய்) – மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றிப் பெற்று 5 ஆவது முறையாக கிண்ணத்தை வென்று மும்பை அணி சாதனை படைத்துள்ளது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதன்படி, டில்லி கெப்பிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கிண்ணத்தை 5 ஆவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகக் கிண்ணத்தில் ஸ்மித் – வார்னர் விளையாடுவார்கள்..?

ஷாகிப் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகல்

நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரருக்கு புற்றுநோய்