விளையாட்டு

IPL சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

(UTV | துபாய்) –  இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி எதிர்கொள்கின்றது.

அதேவேளை, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதன் முறையாக இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (தலைவர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

டெல்லி: மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (தலைவர்), ஹெட்மயர், ரிஷாப் பண்ட், ரஹானே, பிரவின் துபே, அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், காஜிசோ ரபடா, நோர்டியா.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் மீளவும் ஒத்திவைப்பு?

குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை

கொரோனா வலையில் மொயீன்