உள்நாடு

கொரோனாவினால் பலியாகும் முஸ்லிம் ஜனாஸாக்கள் தொடர்பில் அலி சப்ரி கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பினால் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கும் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கும் வரும் 100 தொலைபேசி அழைப்புக்களில் 99 அழைப்புக்கள் முஸ்லிம்களை தகனம் செய்வதை தடுத்து நிறுத்தி அடக்கம் செய்ய அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தே என அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் நியாயமான பிரச்சினையை நியாயமான முறையில் முன்வைக்கும் போது எமக்கு இனவாதிகள் என சாயம் பூசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் 189 நாடுகளில் அடக்கம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அடக்கம் செய்வதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கோரிக்கை விடுப்பதினால் நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்துற்கு சவால் விடுக்கின்றோம் என்ற அர்த்தமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

சுதந்திர தின ஒத்திகை தொடர்பிலான அறிவித்தல்

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை