(UTV | கொழும்பு) – சுகாதார பாதுகாப்பு முறைமையினை பின்பற்றி, இன்று முதல் அலுவலக ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் அந்த ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வடக்கு மார்க்கத்தில், குருநாகல் ரயில் நிலையம், முத்தெட்டுகல உப ரயில் நிலையம், பிரதான மார்க்கத்தில் அமைந்துள்ள தெமட்டகொடை உப ரயில் நிலையம், களனி ரயில் நிலையம், வனவாசல உப ரயில் நிலையம், றாகமை ரயில் நிலையம் ஆகியனவற்றில் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாக்கத்தில் பயணிக்கும் ரயில்கள், பேரலந்த உப ரயில் நிலையம், ஜாஎல ரயில் நிலையம், நீர்கொழும்பு ரயில் நிலையம், கட்டுவ உப ரயில் நிலையம் என்பனவற்றில் நிறுத்தப்பட மாட்டாது.
கரையோர மார்க்கத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்கள், பாணந்துறை ரயில் நிலையம், பின்வத்தை உப ரயில் நிலையத்திலும், களனி மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள், பேஸ்லைன் ரயில் நிலையம் மற்றும் கொட்டா வீதி உப ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.