(UTV | கொழும்பு) – அலுவலக ரயில் சேவைகள் நாளை(09) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தூர பிரதேசங்களுக்கான பேரூந்து சேவைகள் நாளை(09) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த பேருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්