(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது 22 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2,832 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 425 வாகனங்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கையில்,
இதேவேளை சமூக இடைவெளி பேணாமை மற்றும் முகக்கவசங்கள் அணியாமை தொடர்பிலும் கடந்த ஒன்பது நாட்களுக்குள் மாத்திரம் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්