உள்நாடு

உலர் உணவுப்பொதி : மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின், கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தபடுமாயின், அவர்களுக்கும் தனித்தனியாக ரூபா 10,000 பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப்பொதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரண உலர் உணவுப்பொருள் பொதி விநியோகம் தொடர்பாகவே கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இதனை தெரிவித்தார்.

இந்த நிவாரணப்பொதி இதுவரையில் கிடைக்காதவர்கள் சுகாதார அதிகாரி அல்லது இந்த தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு தகவலை வழங்கினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கே வந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்த அவர்

அவ்வாறு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் இதற்கென உள்ள 011 236 9139 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிரதேச செயலாளரின் மூலம் உங்களது உலர் உணவுப்பொதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா எம்பி மீது அவதூறு வழக்கு

editor

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – 05 பேர் மீண்டும் விளக்கமறியலில்