உள்நாடு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் யோசனை

(UTV | கொழும்பு) – பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை நடத்துவது குறித்த யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண, வலைய மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கு இடையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று(06) இடம்பெற்றுள்ளது.

அரச பாடசாலைகளில் நவம்பர் 9ம் திகதி முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், 2ம் அலை கொவிட்19 பரவல் காரணமாக 2 வாரங்களுக்கு இந்நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்

நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது வாக்குறுதி அரசியலே – ரணில் விக்ரமசிங்க

திலித்துடன் அவசர சந்திப்பில் தயா ரத்நாயக்க!