(UTV | ஜெனீவா ) – கொவிட் 19 (கொரோனா) வைரஸை அறிவியல் சான்றுகள் அடிப்படையில் அணுகினால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்பதை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, இன்னுமொரு தொற்றுநோய்க்கு உலகம் தயாராக வேண்டும் என்று எச்சரித்துள்ள இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
உலகத்தை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்திய கொரோனா , எதிர்கால அவசர நிலைகளைக் கவனித்துக் கொள்வதற்கான ஒரு வரைவு தீர்மானத்தை உலக சுகாதார சபை பரிசீலித்து வருகிறது.
இந்த வரைவு சுகாதார அவசர நிலைகளுக்கான ஆயத்தத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு இணக்கமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
எமக்குத் தேவையான தடுப்பூசிகள், நோயறிதல்கள் மற்றும் சிகிச்சை முறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும்; அவை அனைத்து நாடுகளுக்கும் சமத்துவத்தின் அடிப்படை யில் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, ஒரு திட்டத்தின் கீழ் உலகம் முதன் முறையாக அணி திரண்டுள்ளது.
அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் இப்போது தயாராக வேண்டும். இது தொடர்பாக உலக சுகாதார சபை, சர்வதேச சுகாதார விதிமுறைகளுடன் மிகவும் வலுவான இணக்கத்தின் மூலம், சுகாதார அவசர நிலைகளுக்கான தயார் நிலையை வலுப்படுத்தும் ஒரு வரைவுத் தீர்மானத்தை பரிசீலிக்கும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.