உள்நாடு

பாகிஸ்தான் கைதிகள் 43பேர் மீளவும் அந்நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 43 பாகிஸ்தான் பிரஜைகளும் இன்று(04) அதிகாலை பாகிஸ்தானின் விசேட விமானம் மூலம் இஸ்லாமாபாத் விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

குறித்த 43 பேரும் 10- 15 வருடங்கள் இலங்கையில் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தவர்கள் என்பதுடன், கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான்- இலங்கைக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தக்கு அமைய, குறித்த கைதிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை