(UTV | நெதர்லாந்து ) – நெதர்லாந்து நாட்டின் பிஜ்ஹென்சி நகரில் டி அக்கர்ஸ் என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. குறித்த மெட்ரோ ரயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக டி அக்கரஸ் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
நீர் பரப்பிற்கு மேலே அமைந்துள்ள இந்த மெட்ரோ நிலையத்தில் உள்ள ரயில்பாதையில் முடிவில் திமிங்கிலத்தின் வால் போன்று இரண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், .ரயிலின் சாரதி வழக்கத்தை விட சற்று வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மெட்ரோ ரயில் தண்டவாளத்தை தாண்டி வேகமாக சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார திமிங்கிலத்தின் வால் மீது நின்றுள்ளது.
அந்தரத்தில் திமிங்கில வாலின் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலை மீட்கும் நடவடிக்கையில் மெட்ரோ ரெயில் நிர்வாகமும், மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், மெட்ரோ ரெயில் திமிங்கில வால் உதவியுடன் நிற்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්