(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேரை நேற்று வரைக் கைது செய்த பொலிஸார், 253 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதுவரை 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.