உள்நாடு

ஊரடங்குச் சட்டம் நீக்குவது தொடர்பான தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே, மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து, தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 29ம் திகதி மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாளை(02) அதிகாலை 5.00 மணிக்கு நீக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், கிடைக்கும் அறிக்கைகளை முறையாகப் பரிசீலித்த பின்னரே உறுதியான தீர்மானத்தை எட்ட முடியுமென்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்தத் தொற்று மேலும் பரவக்கூடுமா என்பதை அவதானிக்க வேண்டுமென்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

பந்துல, பிரசன்ன மற்றும் விமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்