கிசு கிசு

மேல் மாகாண ஊரடங்கு தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்ற நிலையில் மேல்மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே, மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது தொடர்பாகத் தீர்மானிக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

நாட்டில் சடுதியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் நேற்றைய தினம் அரைவாசிக்கு அரைவாசி குறைந்துள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வரை பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு இஉத்தரவு தொடர்ந்தும் நீடிக்கவும் வாய்ப்புக்கள் உண்டு என கொரோனா நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாளை களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யவும் மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிரதமர் மோடியின் கோரிக்கை…

21 வயதுடைய யுவதி மரணம் : PCR முடிவு இன்று

முஸ்லிம் கடைகளில் மலட்டுத் தன்மை கொத்து, உள்ளாடைகள் இப்போது இல்லையா? [VIDEO]