உள்நாடு

PCR இயந்திரம் நாளை முதல் பரிசோதனை நடவடிக்கைக்கு

(UTV | கொழும்பு) –  முல்லேரியா வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை நாளை(02) மீண்டும் பரிசோதனை நடவடிக்கைக்கு பயன்படுத்த முடியும் என இலங்கைக்கான சீன தூதரம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 10 மணி நேர ஆய்வின் பின்னர் பி.சி.ஆர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்ததை அடுத்து அதனை பழுதுபார்ப்பதற்கு வருமாறு இலங்கையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சீன தொழில்நுட்ப குழு இலங்கைக்கு விஜயம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த பி சி ஆர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டில் பி சி ஆர் முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பவி தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில் அநுர கள்ளத்தொடர்பு சீரழிக்க முயற்சிக்கின்றது – சஜித்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3115