உள்நாடு

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய 454 பேர் தனிமைப்படுத்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், தங்காலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்த நபர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..

கடந்த 29 ஆம் மற்றும் 30ம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ – சீனா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு [VIDEO]

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியல்

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்