(UTV | கொழும்பு) – நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்றின் காரணமாக, நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் ஆயிரத்திற்கும் அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්