விளையாட்டு

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

(UTV | கொழும்பு) –  பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.

186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இறுதியில், ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் பெற்ற 6வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உஷான் நிவங்க புதிய சாதனை

ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்த கிரிக்கெட் நுழைவுச் சீட்டுகள்!

ஐரோப்பிய லீக் தொடர் கேள்விக்குறி?