(UTV | கொழும்பு) – பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி, மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு சென்றவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
நேற்று(29) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்றுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්