(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
மருத்துவத் துறையிலும் கொவிட்-19 ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) அறிமுகம்செய்து வைக்கப்பட்டது.
இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள், தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், பி.சி.ஆர். பரிசோதனை சேவைகள், தீர்மானங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්