உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் இன்று(29) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 2ஆம் திகதி காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை, கொத்தட்டுவை, முல்லேரியா, மருதானை, தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிக்குப் பின்னர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்திற்கு இரு முறை மாத்திரம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், பரீட்சை நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்வு

உளுந்து இறக்குமதி தடை மறுபரிசீலனைக்கு

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor