(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களைக் கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று நள்ளிரவுக்குப் பின்னர், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மேல் மாகாணத்தில் உட்பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் இந்த வாரத்தின் இறுதி நாட்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්