உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் : சாட்சி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் ஆணைக்குழு கூடி சாட்சி பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாட்டு காலத்தை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு