(UTV | கொழும்பு) – அதிவேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ, அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தெற்கு அதிவேக வீதியில் பஸ் போக்குவரத்து சேவைகளை இன்று முதல் மட்டுப்படுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கடவத்தை நுழைவாயிலின் ஊடாக அதிவேக வீதியில் பஸ்கள் உள்நுழைவது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ