கிசு கிசு

கொரோனா நோயாளிகளின் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் : GMOA எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவலின் வீரியம் அதிகரித்து வரும் இந்நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் கொரோனா நோயாளிகளின் மரண எண்ணிக்கையானது அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள் வைரஸின் உண்மை நிலை தொடர்பில் மந்த கதியில் இருப்பதாகவும் உண்மை நிலைமையினை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் குறித்த சங்கமானது மேலும் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் நாட்டில் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு ICBT மாணவனுக்கு கொரோனா தொற்று – நிர்வாகம்

‘தந்தை நலமாக உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம்’

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை