(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட பரிசோதனை நிலையமாக இன்று முதல் செயற்படுவதாக பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் எவ்வித மாற்றுக் கருத்துக்களையும் பல்கலைக்கழக உரிமையாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கவில்லை என்பதோடு, குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.