(UTV | கொழும்பு) – மக்கள் முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம் கொவிட் 19 பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மாத்திரம் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் என்றும், ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களையே அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.