உலகம்

நடிகை குஷ்பு கைது

(UTV | இந்தியா) –  இந்தியாவின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர்.

சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து சிதம்பரத்தில் பா.ஜனதா நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் குஷ்புவை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாய்லாந்து பிரதமரும் விதிவிலக்கல்ல

இத்தாலியில் கொரோனா வைரஸ் – 17 பேர் பலி

முதல்முறையாக முகக்கவசம் அணிந்த அமெரிக்க அதிபர்