(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் பொதுப் போக்குவரத்தில் உரிய முறைமையில் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், பொது இடங்களிலும், வரிசைகளிலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை பொதுமக்கள் பின்பற்றாத நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.