(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றுடன் கொஹுவல, பேலியகொட, வெதமுல்ல ஆகிய விசேட அதிரடிப்படையினரின் முகாம்களிலுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மூன்று முகாம்களும் (STF) முடக்கப்பட்டுள்ளன.
குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலியகொடையில் இருந்து மீன் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலமே கொரோனா தொற்று முகாம்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.