(UTV | கொழும்பு) – 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தில் இன்று(26) வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்
இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது.
41 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறமுடியுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாகவே வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්