(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி டொனால்ட் ட்ரம்ப் புளோரிடாவில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது வாக்கை முன்கூட்டியே செலுத்தியுள்ளார்.
இதுவரை 55 மில்லியன் அமெரிக்க மக்கள் தமது முன்கூட்டிய வாக்குகளைச் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
ட்ரம்ப் என்னும் இளைஞர் ஒருவருக்கு தனது வாக்கை செலுத்தியுள்ளதாக, டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் தேர்தலொன்றுக்கு முன்பாக, தபால் மூலம் அல்லது நேரில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්