(UTV | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை நாளைய தினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை(26) காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அவற்றை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (26) திறக்கப்படவுள்ளதாகவும், நிறுவன அடையாள அட்டையை காண்பித்து ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්