(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 37 பேர் மீன்பிடி துறைமுகங்களில் 24 பேர் பேலியகொட மீன்சந்தை மற்றும் மினுவாங்கொட ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் 140 பேர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,354 ஆக அதிகரித்துள்ளது.