(UTV | இந்தியா) – இந்தியாவில் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகபடா என்ற நகரில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து பாரியளவில் இருந்ததால், பல்பொருள் அங்காடியில் அருகில் இருந்த 55 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த மக்கள் சுமார் 3,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
24 தீ அணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைக்கும் பணியில் சுமார் 250 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியின் போது தீ அணைப்பு வீரர்கள் இருவர் காயம் அடைந்துள்ளதுடன், தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්