கேளிக்கை

கார்த்திக்கு ஆண் வாரிசு

(UTV | இந்தியா) – கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் கவுண்டம்பாளையத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கார்த்தியும் மனைவியுடன் கவுண்டம்பாளையத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரஞ்சனி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து கார்த்தி ட்விட்டரில் தெரிவித்து, டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குட்டிப் பாப்பாவுக்கு அனைவரின் ஆசியும் தேவை என்று கூறியுள்ளார்.

கார்த்தியின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்ணன் சூர்யாவுக்கும் முதலில் பெண் குழந்தை அடுத்து ஆண் குழந்தை, தம்பிக்கும் அப்படியே. வாழ்த்துக்கள் கார்த்தி என்று பலரும் வாழ்த்தியுள்ளனர்.

கார்த்தி, ரஞ்சனி தம்பதிக்கு உமையாள் என்கிற மகள் இருக்கிறார். மகளுக்கு தூய தமிழ் பெயர் வைத்த கார்த்தி, மகனுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர இயக்குநர் முடிவு?

உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா?

நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்…