கிசு கிசு

இன்று முதல் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ள கம்பஹா மற்றும் நீர்கொழும்பில் உள்ள 19 பகுதிகளில் இன்று முதல் கடுமையான ஊரடங்குச் சட்டம் செயல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரதான சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது அத்துடன் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் பேரூந்துகள் அனுமதிக்கப்படாது.

கண்டி-கொழும்பு பிரதான சாலையில் உள்ள கம்பஹா, யக்கல மற்றும் நிட்டம்புவ பொலிஸ் பகுதிகளிலும், நீர்கொழும்பு பிரதான சாலையில் உள்ள கந்தானை, சீதுவ மற்றும் ஜா-எல பகுதிகளிலும் இந்த சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவு அமுல்செய்யப்பட்ட பகுதிகள் வழியாக நீண்ட தூர பேரூந்துகள் செல்ல அனுமதிக்கப்படுவதோடு, பரீட்சைக்கு தோற்றிவரும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

(VIDEO)-கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மெர்க்கலுக்கு கிடைத்த முதல் பரிசு என்ன தெரியுமா?

வன ஜீவராசிகளின் உயிருக்கு கேள்விக்குறி [PHOTOS]

மனிதாபிமானத்துடன் வாழ்வதற்கு விரும்பிய உனக்கு நான் லிமினி வாழ்த்துகிறேன்