உலகம்

கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி

(UTV | இத்தாலி) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை இத்தாலி அறிவித்துள்ளது.

அந்நாட்டு பிரதமர் கியுசெப்பே கொன்டே இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. நாங்கள் நேரத்தை வீணடிக்க முடியாது, ஒரு பொது முடக்கல் நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும், இது பொருளாதாரத்தை கடுமையாக சமரசம் செய்யலாம். அரசாங்கம் இங்கே உள்ளது, ஆனால் எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்..

.. மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கின்றன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணல் மற்றும் கை சுகாதாரம், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நாங்கள் பாதுகாப்பைக் குறைக்கும் சூழ்நிலைகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளில், அதிகபட்ச முன்னெச்சரிக்கை தேவை..” என தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் 9.00 மணிக்குப் பிறகு பொது இடங்களை மூடுவதற்கும், உணவகங்களை திறக்கும் நேரம் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுமதிக்கும் அளவும் குறைக்கப்படவுள்ளது.

இத்தாலியில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் குறித்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

நேற்றைய தினம் (18) புதிய கொரோனா தொற்றாளர்களாக 11,705 பேரும், சனிக்கிழமை (17) 10,925 பேரும் பதிவாகியுள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் பலி

காஸா போர் நிறைவா? பிரான்ஸ் ஜனாதிபதியின் அழுத்தம்