(UTV | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் மொத்தமாக 302 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 53 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.