(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரயில் மற்றும் பேரூந்துகளின் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதால் வருமானத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தின் அன்றாட வருமானம் 19 மில்லியனிலிருந்து 14 மில்லியனாக குறைவடைந்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமையால், தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை இரத்துச் செய்ய நேர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் அன்றாட வருமானம் 80 மில்லியனிலிருந்து 44 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக, இந்த மாதம் 7ஆம் திகதி தொடக்கம் இன்று வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு 210 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.