உள்நாடு

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை முதல்

(UTV | கொழும்பு) –  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் மீளவும் நாளை(19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சேவைகளைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எனினும் வேரஹர காரியாலயத்தில் முன்னெடுக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் ஒருநாள் சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில், வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது

அடுத்த சில நாட்களில் மேலும் சில எரிபொருள் இருப்புக்கள் நாட்டுக்கு