(UTV | நியூஸிலாந்து ) – நியூஸிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜசிந்த ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன் தலைமையிலான தொழிற் கட்சி பாராளுமன்றின் 120 இடங்களில் 64 இடங்களை பெற்றுள்ளது.
தொழிற் கட்சியானது 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசனங்கனை வென்றுள்ளமையினால் ஆர்டெர்னால் தற்போதைய அமைப்பின் கீழ் ஒற்றை கட்சி அரசாங்கத்தை உருவாக்க முடியும்.
80 ஆண்டுகளில் நியூசிலாந்தின் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி இதுவென வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தின் அரசியல் வர்ணனையாளர் பிரைஸ் எட்வர்ட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.