விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

(UTV | துபாய்) –  நேற்று(16) நடைபெற்ற 13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 32 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 148 ஓட்டங்களை பெற்று கொண்டது, பேட் கம்மின்ஸ் 53 ஓட்டங்களும் மோர்கன் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் 149 ஓட்டங்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கெய்லின் அபார சதத்தால் பஞ்சாப் வெற்றி

இலங்கை அணியினை சாடும் : முத்தையா

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்