(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 58 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,850 ஆக அதிகரித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්