(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று(16) காலை 8 மணி தொடக்கம் திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.
பொது இடங்களுக்கு வருகை தரும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சமூக இடைவௌியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கம்பஹா மாவடத்தின் 19 பொலிஸ் பிரிவில் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.