கிசு கிசு

வைத்தியர் ஷாபி கருத்தடை செய்ததாக கூறப்பட்ட பெண்களுக்கு குழந்தை பாக்கியம்

(UTV | கொழும்பு) – கடந்த ஆண்டில் பெரிதும் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருந்த கருத்தடை வைத்தியம் செய்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான குற்றஞ்சாட்டிய பெண்கள் பலர் தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு முறைப்பாடுகளை முன்வைத்த 800 இற்கும் அதிகமான தாய்மார்களில் 268 பேரின் முறைப்பாடுகள் தொடர்பில் இந்நாட்களில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த தாய்மார்கள் 268 பேரில் 10 தாய்மார்களுக்கு குழந்தைகள் கிடைத்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாகவும் விசாரணைகள் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சுமார் 650 முறைப்பாடுகளினதும் விசாரணைகளில் இவ்வாறே தெரிவிக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டிசம்பர் இறுதியில் பொது முடக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு விதிக்கபட்ட அபராதம்…

பாத்திய ஜயகொடிக்கு கொரோனா