உலகம்

கொரோனாவின் இரண்டாம் அலை : பிரான்ஸ் முடக்கம்

(UTV | பிரான்ஸ்) – உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் தொடங்கியுள்ளதால் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் முதலாக கொரோனா பரவ தொடங்கிய நிலையில் மார்ச் மாதம் முதலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்களும், பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாட்டுடன் கூடிய முழுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு, மக்களும் வீடுகளுக்கு முடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

லண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

உக்ரேன் விமான விபத்தில் 176 பேர் பலி

Johnson & Johnson கொரோனா தடுப்பூசிக்கு கனேடிய அரசு அனுமதி