உள்நாடுவணிகம்

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்

(UTV | கொழும்பு) – சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்று நிலைமையை கவனத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும்.

இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்களை சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோ பருப்பை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட கம்பனி மற்றும் சிலாபம் பெருந்தோட்ட கம்பனி என்பன கொழும்பு நகரத்திற்கான தேங்காய் வழங்களை அதிகரித்துள்ளன. எனவே நுகர்வோருக்கு சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

ஜனவாி 23 முதல் விமான நிலையங்கள் வழமைக்கு

நாளை முதல் இலங்கை வருவதற்கு அனுமதி மறுப்பு

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு